தனியாக பஸ்ஸில் ஏறி பயணம் செய்யும் வீட்டு நாய்!

நாய்கள் நடனம் ஆடுவது, எஜமான் சொல்லும் வேலையை செய்வது, மனிதர்கள் போல பேச முயற்சிப்பது என பல வகையான வீடியோக்களை பார்த்திருப்போம். ஆனால் இந்த நாய் தனியாக பஸ்ஸில் ஏறி பயணம் செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி வருகிறதாம். கேக்கவே, ஆச்சரியமா இருக்குல..

அமெரிக்காவின் சியாட்டிலை  என்னும் பகுதியில் வசித்து வரும் ஜெப் யங்க் என்பவர் லேப்ரடார் இனத்தை சேர்ந்த “எக்லிப்ஸ்” என்னும் கருப்பு நிற நாய் ஒன்று வளர்த்து வருகிறார். எக்லிப்ஸ் தினமும் அவர்களது வீட்டின்  அருகில் உள்ள பார்க்கிற்கு பேருந்தில் ஏறி சென்று ஓய்வெடுத்துவிட்டு வீடு திரும்புமாம்.

அதன் கழுத்தில் பஸ் பாஸ் கட்டப்பட்டு இருப்பதால் அதனை யாரும் தடுக்க மாட்டார்களாம். அதுமட்டுமில்லாமல் அந்த நாய் யாரையும் இடையூறு செய்யாதாம். அந்த நாய் பஸ்ஸில் ஏறி பயணம் செய்வதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். எக்லிப்ஸ் இப்போது இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Exit mobile version