அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்பு

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். புலனாய்வு அமைப்பான சிபிஐயின் மூத்த பொறுப்புகளில் இருந்த இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவருக்கும் ஏற்பட்ட அதிகார போட்டியால், இருவரையும் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது.

இதையடுத்து சிபிஐ இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் தற்காலிகமாக பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அலோக் வர்மா, சிபிஐ இயக்குநராக நீடிக்கலாம் என நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா இன்று மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Exit mobile version