அமெரிக்க அதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தியாளர்-வெள்ளை மாளிகைக்குள் நுழைய மீண்டும் அனுமதி

அமெரிக்க அதிபர் டிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தியாளருக்கு வெள்ளை மாளிகைக்குள் செல்ல மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்று வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சி.என்.என். தொலைக்காட்சி செய்தியாளர் ஜிம் அகோஸ்டா, மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கு அமெரிக்காவிற்கு குடிபெயரும் அகதிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர் கேள்விகள் எழுப்பிய நிலையில், கோபமடைந்த டிரம்ப், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வெள்ளை மாளிகையில் நுழைய அகோஸ்டாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த வாஷிங்டன் பெடரல் நீதிமன்றம், செய்தியாளரின் நுழைவு சீட்டை உடனடியாக திருப்பி அளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த வாஷிங்டன் நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் பத்திரிகையாளர் உரிமைகளை வெள்ளை மாளிகை மீறியுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version