ஆன்லைனில் வாக்களிக்க அனுமதிப்பது பெரும் அச்சுறுத்தல்: டிரம்ப்!

இ-மெயிலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் வரப்போகும் அதிபர் தேர்தல் தமக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் களம் இறங்குகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வாக்காளர்களை, இ – மெயில் மூலம் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பல்வேறு மாகாண நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில், இமெயிலில் வாக்களிக்க அனுமதித்தால், தாம் மீண்டும் போட்டியிடும் தேர்தல் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும், இ-மெயிலில் வாக்களிக்க அனுமதிப்பதன் மூலம் கள்ள ஓட்டுக்கள் போட அதிகளவில் வாய்ப்புள்ளது எனவும் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Exit mobile version