தமிழகத்தில் மேலும் 4 கல்வி நிறுவனங்களுக்கு தொலைதூரக்கல்வி வழங்க அனுமதி

தமிழகத்தில் திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வியை வழங்க, புதிதாக 4 பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைகழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது.

பல்கலைக்கழக மானிய குழு உத்தரவுப்படி,இந்தாண்டு முதல் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகம், தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைகழகம், சென்னை ஸ்ரீ ராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில் நுட்ப நிகர் நிலை பல்கலைகழகம் ஆகிய பல்கலைகழகங்கள், தொலைதூர மற்றும் திறந்த நிலை படிப்புகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி அனுமதித்த பல்கல்கலைகழகங்களில், திறந்த நிலை மற்றும் தொலைதூரக்கல்வி பயின்றால் மட்டுமே அரசு வேலை மற்றும் உயர்கல்விக்கு செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.யூ.ஜி சி.யின் அனுமதியால் தமிழக மாணவர்கள் உயர்கல்வி பயில மேலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

Exit mobile version