ஒகேனக்கல்லில் நிபந்தனையுடன் பரிசல் இயக்க அனுமதி

மேட்டூர் மற்றும் ஒகேனக்கல் அணை நிலவரம் குறித்த செய்திகள் ….

தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல் வரும் காவிரி நீரின் வரத்து வினாடிக்கு, 13ஆயிரம் கனஅடியில் இருந்து 12ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில், 18வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சின்னாறு கோத்திக்கலில் இருந்து மணல்மேடு வரை நிபந்தனைகளுடன் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 17 நாட்களுக்கு பிறகு பரிசல்கள் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117புள்ளி 30 அடியாக உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18ஆயிரம் கன அடியிலிருந்து 11ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு, 10ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு ,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version