திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 83 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
கோயில்களை திறக்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து கடந்த 8ஆம் தேதி சோதனை முறையில் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் வீதம் பொதுமக்கள் இன்று முதல் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் பெற்ற 3 ஆயிரம் பக்தர்கள், தேவஸ்தான கவுண்டரில் இலவச தரிசன டிக்கெட் பெற்ற 3 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர், முகக்கவசம் அணிந்தும், சமூக விலகலைக் கடைப்பிடித்தும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.