சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரை, 9 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லியில் சிவக்குமார் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத 8 கோடியே 59 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் சிக்கியது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டிய அமலாக்கத்துறையினர் கடந்த செவ்வாய் கிழமை கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை செப்டம்பர் 13 ஆம் தேதி வரை 9 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.