24 மணி நேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க அனுமதி

கோடை காலத்தை முன்னிட்டு 24 மணி நேரமும் தண்ணீர் லாரி இயங்க போக்குவரத்து காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் லாரிகளை இயக்க தண்ணீர் லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை மாநகரில் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 4.30 மணியிலிருந்து 9 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்த தண்ணீர் லாரிகள் இனிவரும் காலங்களில் 24 மணி நேரமும் இயக்கப்படும். இதனை ஏற்றுக்கொண்ட தண்ணீர் லாரி உரிமையாளர்களும், தண்ணீர் லாரி ஓட்டுனர்களும் விபத்தை ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version