இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து, இன்று முதல் அனைத்து வகையான கடைகளையும் திறக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாத இறுதி வாரம் ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய கடைகளை தவிர, பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில், கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து, கடைகளை திறக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி வழங்கினார். இதனையடுத்து இன்று முதல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்தும், மக்கள் தேவையான பொருட்களை வாங்க திரண்டனர். ஆனால், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் இதுவரை அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர, பிற கடைகள் திறக்கப்படவில்லை.