வாணியம்பாடி அருகே ஆதிதிராவிட மக்களுக்கு சுடுகாடு கட்ட இடம் ஒதுக்கீடு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரத்தில் வசிக்கும் ஆதி திராவிட மக்களுக்கு சுடுகாடு கட்ட தமிழக அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

நாராயணபுரம் ஆதி திராவிடர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கனவே பாலாற்றங்கரையில் சுடுகாடு அமைத்து தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுடுகாட்டிற்கு செல்லும் பாலத்தை மற்றொரு தரப்பினர் வேலி அமைத்து மறைத்ததுடன், தங்களது விவசாய நிலத்தின் வழியே பிணத்தை எடுத்துச் செல்லவும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தவரின் உடலை பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கி தகனம் செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், பணதோப்பு பகுதியில் இருந்த தமிழக அரசுக்கு சொந்தமான இடத்திலிருந்து 50 சென்ட் நிலத்தை சுடுகாடு கட்ட ஒதுக்கி உள்ளார். இந்த இடத்தில் விரைவில் தகன மேடை அமைத்து தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். தமிழக அரசின் அறிவிப்புக்கு அந்த பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version