ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சிகளை இணையத்தில் நேரடி ஒளிபரப்ப தமிழக அரசு நிதி ஒதுக்கிடு

தமிழக அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சி நிலையத்தில் தரப்படும் பயிற்சிகளை, இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு சார்பில், 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளில் சேருவதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் தரமான பயிற்சியாளர்களைக் கொண்டு இலவசமாகப் பயிற்சி அளிப்பதோடு, தங்குமிடம், உணவு, நூலகம் போன்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், முதல்நிலைத் தேர்வில் தேர்வாகி, முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பயிற்சியோடு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த பயிற்சிகளை கிராமப்புற மாணவர்களும் பார்த்து பயன்பெறும் வகையில், வலைதளத்தில் நேரலையில் ஒளிபரப்ப, 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Exit mobile version