நிதி ஆயோக் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் 15ஆம் தேதி, டெல்லியில் நிதி ஆயோக்கின் ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அனைத்து மாநில ஆளுநர்களுக்கும், முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநில துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு நிதி ஆயோக்கின் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிப்பார். அங்கு வேளாண்மை, நீர் மேலாண்மை, பாதுகாப்பு, ஊரக வேலைவாய்ப்புகள் போன்ற பல்வேறு மக்கள் நலப்பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 2-அது முறையாக மோடி, பிரதமராக பதவியேற்றபின் நடக்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம், இது என்பது குறிப்பிடத்தக்கது.