பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவும், முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளார். இன்று நடைபெறும் இக்கூட்டத்திற்கு முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அஸ்தஸ்து வழங்கக்கோரி அவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version