திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
திருவாரூர் தேர்தல் குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. திருவாரூரில் கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் நிறைவு பெற்றபின்பு இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.மேலும் திருவாரூர் இடைத்தேர்தலை மக்களவை தேர்தலுடன் இணைத்து நடத்த வேண்டும் என்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.