நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்துக்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அனைத்து பள்ளிகளின் பாடப்புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தை மேம்படுத்த வழிகாட்டவும், உத்தரவு பிறப்பிக்கவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைக்கப்பட்டதாக கூறினார். இந்த கவுன்சில் தேசிய பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளதாக தெரிவித்த அவர், கல்வி அரசியல்சாசனத்தின் ஒருங்கிணைந்த பட்டியலில் இருந்தாலும், பெரும்பான்மையான பள்ளிகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ரமேஷ் பொக்கிரியால் கூறினார். தேசிய பாடத்திட்டத்தில் உள்ள சீரான பாடப்புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.