முப்பெரும் தேவியரை வழிபடும் நவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை தொடங்கி தசமி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த 9 நாட்களும் வீடுகளில் கொலு வைத்து மக்கள் மகிழ்வர். இதில் முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் நவராத்திரி விழா தசரா என்று கொண்டாடப்படுகிறது. சென்னையில் ஏராளமானோர் தங்களது வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.