தங்கள் நாட்டு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்த தகவல்களை மறுத்து வரும் ஈரான், அதற்கான ஆதாரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
பெர்சியன் வளைகுடா பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்களை ஈரானின் ஆளில்லா விமானங்கள் படம் பிடித்தன. இந்நிலையில் ஈரானின் ஆளில்லா விமானங்களை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இத்தகவலை தொடர்ந்து மறுத்து வந்த ஈரான், அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா தாக்கி அழித்ததாக கூறிய நேரத்திற்கு முன்பும், பின்பும் ஈரானின் ஆளில்லா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனினும் ஈரானின் இந்த ஆதாரத்தை ஏற்காத அமெரிக்கா, தாங்கள் சுட்டு வீழ்த்தியது உண்மைதான் எனத் தெரிவித்துள்ளது.