அடுத்த இரண்டு மாதங்களுக்கு நடத்தப்பட இருந்த அனைத்து டென்னிஸ் போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு நடத்தப்பட இருந்த அனைத்து டென்னிஸ் போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுருத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்கள் கூடும் நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில், வரும் 16 ஆம் தேதி முதல் டென்னிஸ் போட்டிகள் தொடங்க இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சர்வதேச டென்னிஸ் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.