அகில இந்திய பெண்கள் பளுதூக்கும் போட்டியில், புனே பல்கலைக்கழக வீராங்கனை, சாக்சி பிரகாஷ் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் சார்பில், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 19 மாநிலங்களைச் சேர்ந்த, 350 வீராங்கனைகள் பங்கேற்றனர். 45 கிலோ எடைப் பிரிவில், புனே பல்கலைக் கழக வீராங்கனை, சாக்சி பிரகாஷ் முதலிடத்தைப் பிடித்து, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். வெற்றிபெற்ற மாணவிக்கு ஏராளமானோர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.