நடிகர் கமல்ஹாசன் வீடு உட்பட அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிள்ளைமார் சங்க மேல்நிலைப்பள்ளியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு, வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 250 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு செய்து வரும் அனைத்து திட்டங்களும் புரட்சிகரமானது தான் என்றும், கமல்ஹாசன் வீடு உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படுவதாகவும் கூறினார். புரட்சிகரமான திட்டம் என கல்ஹாசன் எதை எதிர்பார்க்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.