கவிமணி மணிமண்டபம்: தமிழக அரசின் அறிவிப்பிற்கு பலதரப்பினரும் வரவேற்பு

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு பலதரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைக்கு அவர் பிறந்த மண்ணான கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் ஒரு கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் நேற்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு கவிமணி குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version