செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் சர்வதேச மையமாக இந்தியா மாற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு குறித்த மாபெரும் மெய்நிகர் மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. சர்வதேச செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்துகின்றனர். வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
இதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, அடுத்த தலைமுறை நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று கூறினார். நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், கழிவு நீர் வெளியேற்றும் அமைப்பை மேம்படுத்தவும் அதனை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.