தமிழக – கேரள எல்லையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழக எல்லைப் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன்படி, தமிழக எல்லையான பாட்டவயல் பகுதிக்கு பேருந்துகளில் வருபவர்களுக்கு, சுகாதாரத் துறையினர் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முறையான இ-பாஸ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், அல்லது தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் இல்லாதவர்கள், தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதேபோல் கூடலூர் சுற்றுவட்ட பகுதிகளிலும், 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

Exit mobile version