செயற்கை முறையில் இறைச்சி கண்டுபிடித்த அலெப்ஃப் ஃபார்ம்ஸ் நிறுவனம்

அலெப்ஃப் ஃபார்ம்ஸ் (Aleph Farms) என்ற உணவு தொழில்நுட்ப நிறுவனம், 3டி திசுக்களை பயன்படுத்தி முதன் முறையாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயற்கை இறைச்சியை வளர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பு

இஸ்ரேலை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அலெப்ஃப் ஃபார்ம்ஸ் நிறுவனம், இறைச்சிக்காக எந்த உயிரினங்களையும் கொலை செய்யாமல் சுற்றுசுழலுக்கு பாதிப்பில்லாமல் இறைச்சிகளை வளர்க்கும் தங்களுடைய முயற்ச்சியில் முதல் படியை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் ரஷ்யாவின் பயோ பிரிண்டிங் நிறுவனத்துடன் இணைந்து இந்த பணியை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் பசுவிலிருந்து சில செல்கலை எடுத்து அதற்கு தேவையான சத்துக்களையும், செல் வளர தேவையான சூழலையும் வைத்து வளர்க்கபட்டன. இறுதியாக அவை முழுமையான வளரும் தன்மையினை பெற்றன.

மைக்ரோ ஈர்ப்பு நிலைகளின் கீழ் 3டி பயோ பிரிண்டிங் சொல்யூசன்ஸ் மூலம் இந்த இறைச்சி வளர்க்கபடுகிறது. நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத சூழலில் இந்த அதி நவீன ஆராய்ச்சி மூலம் உணவு முறைகளின் வளர்ச்சி அத்தியாவசிய தேவையாக இந்த முறை இருக்கும் என அந்நிறுவனம் கூறுகிறது.

தற்போதைய சூழலில் விண்வெளிப் பயணத்தின் போது வீரர்களுக்குப் உணவளிக்க இந்த முறை உதவும் என்று எதிர்பார்க்கபடுகிறது. எதிர் காலத்தில் பூமியில் பஞ்சம் ஏற்பட்டால் அதனை போக்க இதனை பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது. அலெப்ஃப் ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் உணவுகள் இது வரை விற்பனைக்கு வரவில்லை, வரும் காலங்களில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

Exit mobile version