பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தர் பன்னாட்டுக் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி வருகிறார். 2003ஆம் ஆண்டு வங்கதேசம் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் நடுவர் பணியை இவர் தொடங்கினார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் இடையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நடுவராகப் பணியாற்றி வருகிறார். இந்தப் போட்டி இவர் நடுவராகப் பணியாற்றும் 128ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த நடுவர் ஸ்டீவ் பக்னரின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார்.
இந்த இருவரைத் தவிரத் தென்னாப்பிரிக்காவின் ரூடி குயர்ட்சன் 108 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் ஆகிய மூன்று வகைகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அலீம் தர் 376 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.