கட்சி கொடியுடன் பொது இடங்களிலேயே மது அருந்திய அமமுக நிர்வாகிகள்

உதகையில் டிடிவி தினகரனின் பிரசாரக்கூட்டத்தில், அமமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்த காட்சிகள் வெளியாகி உள்ளன. உதகையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து, டிடிவி
தினகரன் திறந்த வேனிலிருந்து பிரசாரம் செய்தார். அவரது உரையால் வெறுப்படைந்த பெண்கள் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினர்.

பின்னர் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு அமமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்தனர். இந்த கூட்டத்திற்கு வந்த பலர் அமமுக கட்சி கொடியுடன் பொது இடங்களிலேயே மது அருந்தியது பொது மக்களை முகம் சுளிக்க வைத்தது. இந்த தேர்தல் விதி மீறல்கள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version