அல்-அஜீஸா உருக்காலை முறைகேடு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை எதிர்த்து நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அல்-அஜீஸா இரும்பு உருக்காலை தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் ஏராளமான குளறுபடிகள் உள்ளதாகவும், எனவே, அந்தத் தீர்ப்பு ரத்து செய்யப்படும் என நம்புவதாகவும் நவாஸ் ஷெரீப் தரப்பில் கூறப்படுகிறது.