சென்னையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை ராஜரத்தினம் அரங்கில் போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தைக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடக்கி வைத்தார்.

சென்னை ராஜரத்தினம் அரங்கில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அனைத்துக் காவல் மாவட்டத்திலும் குறைதீர் முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு குறை தீர் கூட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அதனைச் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டார். புகாரை விசாரிக்காமல் அலட்சியம் காட்டும் காவல்துறையினரின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version