விஸ்வாசம் படத்தின் அடுத்தடுத்த சாதனை : அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அஜித் நடித்து இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படத்தின் ” கண்ணான கண்ணே ” பாடல் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா இணைந்து உருவான படம்”விஸ்வாசம்”  இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். விஸ்வாசம் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.

கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான இப்படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” பாடல் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தந்தை மகள் உறவை மையமாக வைத்து உருவான இப்பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதியிருந்தார். தற்போது  ” கண்ணான கண்ணே ” பாடல் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் #100loveforkannanakanne என்ற ஹேஸ்டாக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த பாடல் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடல்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Exit mobile version