பாஜகவுடன் அஜித் பவார் சேர்ந்தது அவரது சொந்த முடிவு :சரத்பவார் அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் பாஜகவுடன் சேர்ந்து அஜித் பவார் ஆட்சியமைத்தது அவரது தனிப்பட்ட முடிவு என்றும், பாஜகவுக்குத் தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை என்றும் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். இந்நிலையில் பாஜக தலைமையிலான அரசில் அஜித்பவார் சேர்ந்தது அவரது தனிப்பட்ட முடிவு என்றும், தேசியவாத காங்கிரஸ் பாஜகவுக்கு ஆதரவளிக்கவில்லை என சரத்பவார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அஜித் பவாரின் முடிவைத் தான் ஆதரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அஜித்பவார், சரத்பவாரின் சொந்த அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version