வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டி

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். மக்களைவைத் தேர்தலில் வாரணாசி தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் விரும்பினால் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் எனக் கூறியிருந்தார்.  இந்நிலையில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என  காங்கிரஸ் கட்சி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

Exit mobile version