டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அஜய் மக்கான் ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி காங்கிரஸ் தலைவராக கடந்த நான்கு ஆண்டுகளாக பதவி வகித்து வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்றார்.தான் சிறப்பாக பணியாற்ற துணை நின்ற ராகுல் காந்திக்கும். காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தனது டிவிட்டர் பக்கத்தில் அஜய் மக்கான்நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது ராஜினாமாவிற்கு உடல்நிலையை அஜய் மக்கான் காரணமாக கூறியிருந்தாலும், எதிர்வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது