ஒரே ஒரு அறிவிப்பு மூலம் Jio-வை பின்னுக்கு தள்ளிய ஏர்டெல்-வோடஃபோன்

ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இலவச அன்லிமிடெட் அழைப்புகளுக்கான சலுகைகளை வழங்கியுள்ளது.

ஜியோ நிறுவனம் மற்ற நிறுவன வாடிக்கையாளர்களை அழைக்க நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கும் நடைமுறையை சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இதனை தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்யப்பட்ட கட்டண மாற்றத்தால் வாடிக்கையாளர்களின் சேவை கட்டணமும் உயர்ந்தது. இதனால் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் பயனாளர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தங்கள் நிறுவனம் மூன்று புதிய ட்ரூலி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இவற்றின் விலை ரூ. 219, ரூ. 399 மற்றும் ரூ. 449 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ட்ரூலி திட்டங்களில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

ரூ. 219 பிரீபெயிட் சலுகையில் 28 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும், ரூ. 399 சலுகையில் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ரூ. 449 க்கான சலுகையில் அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 90 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகைகள் தவிர ஏர்டெல் வழங்கி வரும் மற்ற அன்லிமிடெட் சலுகைகளுக்கும், இந்தியா முழுக்க உள்ள அனைத்து நெட்வொர்க்களுக்கான அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை எந்தவித கட்டுப்பாடும் இன்றி இலவசமாக வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.

Exit mobile version