சேவை கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசளித்த “ஏர்டெல்”

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தங்களது அடிப்படை சேவைக்கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

தொலைத்தொடர்பு சந்தைகளில் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனத்தின் சேவைக் கட்டணங்கள் கடந்த மாதம் உயர்ந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அவர்களை சமாளிக்க அனைத்து நிறுவனங்களும் பல்வேறு ஆஃபர்களை வாரி வழங்கி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஆஃபர் அளித்த ஏர்டெல் நிறுவனம் தற்போது கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

அதன்படி, ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் இனிமேல் மினிமம் ரூ.45க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பழைய விலை ரூ.23 ஆகும். மேலும் ரூ.45க்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியும் , இந்த சலுகை முடிவடைந்தால் மேலும் 15 நாட்கள் இன்கமிங் கால்களுக்கு அனுமதியும், தொடர்ந்து ரீசார்ஜ் செய்யாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version