ஏர்டெல் மொபைல் செயலியில் ஹேக்கர்கள் ஊடுருவல் சரி செய்து விட்டதாக ஏர்டெல் நிறுவனம் தகவல்

தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் மொபைல் ஆப்பில், வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் களவாடப்படும் நிலை ஏற்பட்டு, அது துரிதமாக சரி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஏர்டெல் மொபைல் ஆப்பில் பயன்படுத்தப்படும் ஏபிஐயில் இருந்த சில குறைபாடுகளை பயன்படுத்தி சமூக விரோத கும்பல்கள் ஊடுருவியுள்ளன. இந்த கும்பல்கல் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களின் வாயிலாக அவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி, செல்போனின் IMEI எண் உள்ளிட்டவை திருடப்படும் வாய்ப்பு உருவானது. இந்த குளறுபடியை பெங்களூருவில் வசிக்கும் நபர் ஒருவர் கண்டுபிடித்து, ஏர்டெல் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து தவறை சரி செய்து விட்டதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்களிடம் நிலவி வந்த அச்சம் விலகியுள்ளது

Exit mobile version