ஹாங்காங்கில் விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்

ஹாங்காங்கில், ஒப்படைப்பு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, கடந்த சில தினங்களாக பொது மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். அரசிற்கும், போராட்டகாரர்களுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆங்காங்கே கலவரங்களும் அவ்வப்போது வெடித்து வருகிறது. ஆசிரியர்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் போராடி வரும் நிலையில், தற்போது விமான நிலைய ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். விமானிகள், கேபின் க்ரூ பணியாளர்கள், விமான நிலைய ஊழியர்கள் உட்பட மொத்தம் 2 ஆயிரத்து 300 பேர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 224 விமாங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version