சென்னைக்கு வந்த என்னை வரவேற்க இவ்வளவு மக்கள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பாஜக தொண்டர்கள் மத்தியில் மோடி உரையாற்றிய மோடி, தமிழில் வணக்கம் கூறி உரையை தொடங்கினார். அமெரிக்காவில் ஐ.நா. சபையில் தமிழ் மொழியின் பழமை மற்றும் பெருமை குறித்து தான் பேசியதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தமிழ் மொழி குறித்து அதிக செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 130 கோடி மக்களும் ஒருங்கிணைந்து உழைத்தால் இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கவுரவத்தை பெறும் எனவும் அவர் கூறினார். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு கூறவில்லை என்றும் ஆனால், ஒருமுறை பயன்டுத்தப்படும் பிளாஸ்டிக் வேண்டாம் என்பதை வலியுறுத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.