கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்- 21 விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருகூர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக போர் விமானத்தில் இருந்து ஆயிரத்து 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் தனியாக கழண்டு சூலூர் அருகே விவசாய நிலத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. விமானத்தின் பாகங்கள் விவசாய நிலங்களில் சிதறி கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இரட்டை பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்ட விமானம் என்பதால் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.