கர்நாடகாவில் சோதனையின் போது விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய ஆளில்லா ட்ரோன் விமானம் சோதனையின் போது விபத்துக்குள்ளானது.

இந்திய ராணுவத்திற்காக டி.ஆர்.டி.ஓ நிறுவனம் ரஸ்டோம்- 2 என்ற ஆளில்லா உளவு விமானத்தை உருவாக்கி வந்தது. இந்த நிறுவனம் தயாரித்து வரும் விமானங்கள் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள தலைமையகத்திற்கு அருகே சோதனை மேற்கொண்டு வருவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது இயந்திரகோளாறு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடித்த விமானம் கீழே விழுந்து நொருங்கியது. விளைநிலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Exit mobile version