ஏர்செல் மேக்சிஸ் வழக்கு – ப. சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராக சிதம்பரம் இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக அந்நிய செலாவணியை பெற அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அவரை கைது செய்வதற்கான தடையை நவம்பர் 29ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், ப. சிதம்பரம் மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அவருடன் 9 பேர்களின் பெயர்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version