ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் மகன் கார்த்திக்கை கைது செய்ய மார்ச் 8 ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக முறைகேடாக அனுமதி வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் என இருவர் மீதும் தனித்தனியாக மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரத்தையும் கைது செய்யும் நடவடிக்கைக்கு வரும் 8 ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post