ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் முன்ஜாமின் மனுவின் மீதான தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்றம் வரும் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டெல்லி ரூஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், போலி நிறுவனங்களின் பெயரில் பணப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதும், சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகளில் வங்கிக் கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இது குறித்து விரிவாக விசாரணை நடத்த இருவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். சாட்சிகளைக் கலைத்து, சான்றுகளை அழித்துவிடுவார்கள் என்பதால் இருவருக்கும் முன்ஜாமின் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து மனுவின் மீதான தீர்ப்பை வரும் 5ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Exit mobile version