ஏர்செல் – மேக்ஸிஸ் வழக்கு : 6 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

ஏர்செல் – மேக்ஸிஸ் மீதான வழக்கின் விசாரணை 6 வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் – மேக்ஸிஸ் முறைகேடு தொடர்பான வழக்கு இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, தேதி குறிப்பிடாமல் 6 வார காலத்திற்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் உரிய ஆதாரங்களையும், வெளிநாட்டிலிருந்து திரட்டப்படும் ஆதார ஆவணங்களையும் கொண்டு வழக்கை வலுப்படுத்துங்கள் என நீதிபதி ஓ.பி.சைனி சிபிஐ மற்றும் அமலக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.

Exit mobile version