கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என, உலக சுகாதார நிறுவனத்துக்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், ஐந்து லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காற்றின் மூலம் வேகமாக பரவுவதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக, 30 நாடுகளை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றம் கொண்டு வரப்படும் எனவும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஏற்கனவே, பாதிக்கப்பட்டவர்களின் தும்மல் மற்றும் இருமலில் உள்ள நீர்திவலைகளில் இருந்து கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.