உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து டெல்லியில் பெருமளவு பட்டாசு எங்கும் வெடிக்காத போதும் காற்றின் மாசு இன்றும் மோசமான அளவிலேயே இருந்தது.
டெல்லியில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பிறகு காற்றின் மாசு மிக அதிக அளவில் இருந்தது. பனியைப் போல் மாசு நகர் முழுவதும் சூழ்ந்திருந்தது. இந்தாண்டு அத்தகைய நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில், டெல்லி நகரில் தீபாவளிக்கான அடையாளமான பட்டாசு எங்கும் வெடிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் காற்றின் மாசு மோசமான அளவிலேயே உள்ளது. காற்று மாசு குறித்த அளவினை காட்டும் பலகையில், அபத்தான அளவான 500 என்ற அளவிலேயே காற்று மாசு இருந்தது.
Discussion about this post