விமானப்படை தினத்தை முன்னிட்டு சாகசத்தில் ஈடுபட்ட விமானங்கள்

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

87வது விமானப்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நடைபெற்ற விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சியில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட, பீரங்கிகள் உள்ளிட்ட அதிக எடை கொண்ட ஆயுதங்களை உயரமான பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் சினுக் ரக ஹெலிகாப்டர்கள் அணி வகுத்து வந்தன. இதைத் தொடர்ந்து மலைப்பகுதிகளில் தாக்குதல் நடத்தும் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் அணிவகுப்பு நடத்தின.

இதில் மிராஜ் 2000 விமானத்தில் சென்று பாலகோட் பயங்கரவாத முகாம்களை வெற்றிகரமாக தாக்கி அழித்த குழுவினர் சாகச நிகழ்ச்சியில் அணிவகுத்துச் சென்றனர்.இதேபோல் பாகிஸ்தானின் எப்16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் மற்றும் குழுவினர் மிக் 21 பைசன் ரக போர் விமானத்தில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர். அவெஞ்சர் என்ற தாக்குதல் நடத்தும் வியூகத்தை செய்து காட்டி பார்வையாளர்களுக்கு பிரம்மிப்பூட்டினர். உள்நாட்டுத் தயாரிப்பான தேஜஸ் ரக போர் விமானங்கள், சூர்ய கிரண் விமானங்கள், சரண் ஹெலிகாப்டர் குழுவின் சாகசங்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Exit mobile version