நடுவானில் எஞ்சின் பழுதான காரணத்தால், பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
112 பயணிகளுடன் கனடாவின் வான்கூவரிலிருந்து, அலாஸ்காவுக்கு ஏர்கனடா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் திடீரென ஒரு எஞ்சின் பழுதானது. இதையடுத்து சாதுர்யமாக செயல்பட்ட விமானி, ஒரு எஞ்சின் உதவியுடன் புறப்பட்ட இடத்திற்கே விமானத்தை தரையிறக்கினார்.
விமானம் பத்திரமாக தரையிறக்கப் பட்ட பின்னர்தான், எஞ்சின் பழுதாகி ஒரு எஞ்சின் உதவியுடன் தரையிறக்கப்பட்டதை அந்த விமானி தெரிவித்துள்ளார்.
எஞ்சின் பழுதானது குறித்து தங்களிடம் தெரிவிக்காமலேயே, சூழலை புத்திக்கூர்மையுடன் கையாண்ட விமானிக்கு, பயணிகள் பாராட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் மற்றொரு விமானத்தின் மூலம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.