சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,செங்கல்பட்டில் 650 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த தடுப்புசி மையம் , இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக தெரிவித்தார்
இந்த மையத்தை திறந்து வைக்க,பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் சிறப்பு ஸ்பெஷாலிட்டி வசதியை தொடங்க, தலா 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்றார். அதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் ஜே.பி நட்டா நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.