கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. எதிர்ப்பு

புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர், தலையில் மண் சட்டியை அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.

புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர், தலையில் மண்சட்டியை அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். பல மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பள தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல், தலைக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தி வருவதாக புதுவை ஆளுநர் கிரண்பேடி மீது அவர்கள் குற்றம் சாட்டினர். சம்பள பணம் வழங்காததால், தங்களால் தலைக்கவசம் வாங்க முடியவில்லை என்றும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் கூறினர்.

Exit mobile version